மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் ஆதாயத்திற்காக முடக்கச்செயற்பாடுகளை ரஷ்யா தளர்த்துவதாக குற்றச்சாட்டு

- Advertisement -

அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கையை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி  Vladimir Putin மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தை வகிக்கின்றது.

- Advertisement -

இதன்படி கடந்த இரண்டு மாதங்களாக ரஷ்ய மக்கள் அருகில் உள்ள உணவு விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில்,  ரஷ்யாவின் தலைநகர் Moscow இல்  தற்போது முடக்க செயற்பாடுகளை நீக்குவதாக ஜனாதிபதி  Vladimir Putin தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படாத நிலையில் முடக்க செயற்பாடுகளை நீக்குவது குறித்த  ஜனாதிபதி  Putin இன் அறிவிப்பை ரஷ்ய மக்கள் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முதியவர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளைய தினம் ஆரம்பம்!

இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளைய தினம் முதல் ஆரம்பமாகவுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டுக்கான ஐந்தாம்...

5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற Kings XI Punjab அணி!

IPL தொடரின் நேற்றைய போட்டியில் Kings XI Punjab அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. IPL தொடரின் 38ஆவது போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நேற்று இரவு இடம்பெற்றது. Kings XI Punjab...

பிரேஸிலில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக சீன தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானம்!

பிரேஸிலில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான தேசிய நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சீன தடுப்பூசியை பயன்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட...

கொரோனா தொற்று குறித்த முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 811 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 186 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று...

Developed by: SEOGlitz