தென் கொரியா உடனான அனைத்து தகவல் தொடர்பாடல்களையும் இன்று முதல் துண்டிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக வடகொரியாவின் அதிபர் Kim Jong-un தெரிவித்துள்ளார்
இதற்கமைய இன்று முதல் வட கொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான இராணுவ மற்றும் அரசியல் தொடர்புகளை முழுமையாக துண்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வடகொரியாவின் அதிபர் Kim Jong-un தெரிவித்துள்ளார்
இதனைத்தொடர்ந்து வடக்கு-தெற்கு கூட்டு தொடர்பு அலுவலகம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் “வடக்கு மற்றும் தெற்கின் அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்புகளையும் முற்றிலுமாக துண்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக Kim Jong-un தெரிவித்துள்ளார்.
Kim Jong-un மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்தினை அடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடகொரியாவின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
இதேவேளை கடந்த ஆண்டு வட கொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான அணுசக்தி மற்றும் அணு ஆய்வு குறித்த பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது