அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான விமான சேவைகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் முன்னெடுப்பது தொடர்பில் வணிகத்தலைவர்கள் விடுத்துள்ள அழைப்பினை நியூசிலாந்து நிராகரித்துள்ளது.
நியுஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில் பாதுகாப்பான பயணத்தை தொடர்வதற்கான மாதிரி வரைபடம் குறித்து பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சர் Winston Peter தெரிவித்துள்ளார்.
குறித்த வரைப்படம் முழுமையடையாத பட்சத்தில் விமானப்பயணம் ஆரம்பிப்பது தொடர்பில் இன்னும் எந்தவித திட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான விமான சேவைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு அதிகளவான வாய்ப்புகள் உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா எடர்ன் Jacinda Ardern தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது