இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு இரண்டு நாட்டு தரப்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான எல்லை பிரச்சினை குறித்த காணொளி மூலமான பேச்சுவார்த்தை இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கிடையில் கடந்த 6 ஆம் திகதி சீனாவின் மோல்டோ பகுதியில் இடம்பெற்றது
குறித்த பேச்சுவார்த்தையில் இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீன இராணுவ படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது
இதனைத்தொடர்ந்து இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு இரு தரப்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சீனா தெர்வித்துள்ளது
இதேவேளை எல்லைகள் குறித்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இரண்டு நாடுகளும் தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன