மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிறவெறி என்பது கொடுமையானது – George Floydஇன் மரணம் தொடர்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போராட்டங்கள்

- Advertisement -

அமெரிக்க பொலிஸ் காவலில் ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd  உயிரிழந்த சம்பவத்தை எதிர்த்து இடம்பெற்று வரும் போராட்டங்கள் அமெரிக்காவில் சமூகச் சீர்திருத்தம் ஏற்படத் தூண்டுகோலாக அமையும் என்று அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பொலிஸாரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd  கொலைசெய்யப்பட்டதை அடுத்து இனவெறிக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டங்கள் குறித்தே ஒபாமா தமது கருத்தை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இதற்கமைய நாடத்தப்பட்டு வரும் குறித்த போராட்டமானது சமூகத்தில் பெரும் தாக்கத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர் அதிகாரங்கள் தொடர்பான கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இதேவேளை   George Floyd ன் கொலை சம்பவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் போராட்டங்களும் எதிர்ப்புகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில்  நிறவெறி என்பது கொடுமையானது என்று ஜேர்மன் ஆட்சியாளர் ஏஞ்சலா மெர்கல் தமது கருத்தை பதிவிட்டுள்ளார்

மேலும் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின் அனுகுமுறை சர்ச்சைக்குரியது என்றும் ஏஞ்சலா மெர்கல்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை அமெரிக்க பொலிஸ் காவலில் ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd  உயிரிழந்த சம்பவத்தை எதிர்த்து  அமெரிக்காவில் 10 ஆவது நாளாக தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற George Floyd நினைவாஞ்சலியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குப்பற்றியமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா இன்று இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

களனிவெளி புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு முதல் அவிசாவளை வரையிலான களனிவெளி புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் சேவையில் இயங்கும் இரு புகையிரதங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக குறித்த ரயில் போக்குவரத்துக்கள்...

லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி   தலவாக்கலை நகரில் மண்டபம் ஒன்றில் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில்  குறித்த நபர்கள்...

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன

நாட்டில் தற்போதைய  நிலையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்   நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலைமையில்  காணப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில்...

தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவை  இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய  கடிதங்கள்  விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

Developed by: SEOGlitz