அமெரிக்க பொலிஸ் அதிகாரியொருவரினால் கொலை செய்யப்பட்ட கறுப்பினத்தவரான George Floyd இன் கொலைக்கு எதிராகவும் , இனவெறிக்கு எதிராகவும் கனடாவில் நடைபெற்றும் வரும் ஆர்ப்பாட்டங்களில் அந்த நாட்டு பிரதமர் justin trudeau பங்கேற்றுள்ளார்.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணியில் பிரதமர் justin trudeau பங்கேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெர்வித்துள்ளன
கடந்த திங்கட்கிழமை 46 வயதான George Floyd எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மூச்சுத்திணறி உயிரிழந்ததை அடுத்து அமெரிக்காவின் மின்னொசட்டா நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதேவேளை சர்வதேச ரீதியிலும் George Floyd ன் மரணத்தை கண்டித்து பல்வேறுப்பட்ட போராட்டங்கள் இடமபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.