ஈக்வேடோரில் எபோலா நோய்த்தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளாதாக உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை கொங்கோ நாட்டின் மேற்கு நகரில் எபோலா நோய்த்தொற்று காரணமாக 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக எபோலா நோய்த்தொற்றை கண்டறியும் பரிசோதனை கொங்கோ நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா நோய்த்தொற்று முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.