மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரேசிலின் சாவோ பாலோ நகரம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது

- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக பிரேசிலில் அதிகளவு  பாதிக்கப்பட்ட சாவோ பாலோ  நகர் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்று பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட சாவோ பாலோ நகரத்தில் உள்ள வணிக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச   ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அதிக மக்கள் தொகை கொண்ட சாவோ பாலோ நகரம் கொரோனா தொற்று பரவலின் மத்திய நிலையமாக காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை  பிரேசிலின் சாவோ பாலோ நகரில் கடந்த 24 மணிநேரத்தில் 340 புதிய உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய கொரோனா தொற்று காரணமாக பிரேசிலில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 797 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 7 இலட்சத்து 75 ஆயிரத்து 184 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நிவார் சூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள நிவார் சூறாவளி, காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 213 கிலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிக்கையில் இந்த விடயம்...

மேலும் சில இடங்களில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை!

முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டமா திணைக்களத்தின் சமர்ப்பனத்திற்கமைய  இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில்...

நுரைச்சோலை – லக்விஜய மின்நிலையம் தொடர்பான விசேட தீர்மானம்!

நுரைச்சோலை - லக்விஜய மின்நிலையம் தொடர்பான சுற்றுச்சூழல் மதிப்பாய்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் இணைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லக்விஜய மின்நிலையம் மற்றும் அது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழு நேற்று...

மைத்ரிபால விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றையதினம் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ஆணைக்குழுவில்...

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் கொரோனா வைரஸ்...

Developed by: SEOGlitz