மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தமது நாட்டு பிரஜைகள் வேறு நாடுகளுக்கு பிரவேசிப்பதற்கு அவுஸ்திரேலியா தடை விதித்துள்ளது

- Advertisement -

கொரோனா  தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தமது நாட்டு பிரஜைகள் வேறு நாடுகளுக்கு பிரவேசிப்பதற்கு  அவுஸ்திரேலியா  அரசாங்கம்  தடைவிதித்துள்ளது.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அவசரகால அதிகாரம்  எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த மார்ச் மாதம்  18 ஆம் திகதி   நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால அதிகாரம் கடந்த மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில்  மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை  அவுஸ்திரேலிய பிரஜைகள் ஏனைய நாடுகளுக்கு பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அவுஸ்திரேலியாவில் இதுவரையான காலப்பகுதியில்   ஏழாயிரத்து 290 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதுடன் 102 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று!

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை இம்முறை நடத்தும் வாய்ப்பை இலங்கை...

Developed by: SEOGlitz