அவுஸ்திரேலியாவில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், உள்நாட்டில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என அந்த நாட்டு சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிமுறைகளுக்கு அமைவாக முடக்கசெயற்பாடுகளை கட்டுப்பாடுகளுடன் அவுஸ்திரேலியா தளர்த்தியிருந்தது.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட 2 கொரோனா தொற்றாளர்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எனவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 274 ஆக பதிவாகியுள்ள நிலையில் 6 ஆயிரத்து 740 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.