மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள அதிர்ச்சி தகவல்..!

- Advertisement -

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று 2022 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியில் 18 முதல் 24 மாதங்கள் வரை நீடிக்கும் என minnesota பல்கலைக்கழக தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

- Advertisement -

இந்த காலப்பகுதிக்குள் மனித உடல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என எதிர்பார்ப்பதாக   minnesota பல்கலைக்கழக தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை,  கொரோனா வைரஸ் உலக மக்கள் சனத்தொகையில் 60 முதல் 70 சதவீதத்திற்கு அதிகமானவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனவும்   minnesota பல்கலைக்கழக தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தடுப்பூசி இல்லாமல் கொரோனா வைரஸை இரண்டு வருடங்களுக்குள் கட்டுப்படுத்துவது கடினம் என  minnesota பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அறிவித்தல் பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் – அங்கஜன் பணிப்பு

யாழ்ப்பாணம் - முனீஸ்வரன் வீதியில் திறந்துவைக்கப்படவுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில், அறுவுறுத்தல் பலகைகளில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்குமாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன்...

பூகொட முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

பூகொட மண்டாவல  பகுதியில் அமைந்துள்ள முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  34 ஆக அதிகரித்துள்ளது. குறித்த தொழிற்சாலையைச் சேர்ந்த 29 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலே  இந்த...

அமெரிக்கத் தூதரக கட்டட பணியாளர்களுக்கு கொரோனா

அமெரிக்கத் தூதரக கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தற்போது குறித்த இரண்டு பேரும் சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளுபிட்டி முகந்திரம்...

இலங்கையின்  பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு தயார் – குடியரசுதின அறிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

இலங்கையின்  பல்வேறு முக்கிய துறைகளில் முதலீடு செய்வதற்கு  இந்தியா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார், இந்தியாவின் 72 குடியரசுத் தினத்தை முன்னிட்டு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன்...

எரிபொருள் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை நிராகரிப்பு

எரிசக்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சரினால் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது, காணொளி வாயிலாக நேற்று இரவு நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக...

Developed by: SEOGlitz