மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதியவகை சிலிண்டருக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயம்

- Advertisement -

எரிவாயு நிறுவனமொன்றினால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் கொழும்பு மாவட்டத்துக்கான சில்லறை விலை ஆயிரத்து 150 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சமையல் எரிவாயு சிலிண்டரின் நிறை 9 தசம் 5 கிலோகிராம் என குறிப்பிடப்பட வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக 12 தசம் 5 கிலோகிராம் சிலிண்டரை ஒத்த வடிவத்தில் குறித்த 18 லீற்றர் சிலிண்டர் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், குறித்த சிலிண்டரை அண்மித்த சில்லறை விலையொன்று உரிய எரிவாயு நிறுவனத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த 18 லீற்றர் சிலிண்டரின் மூலம் வாடிக்கையாளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்திருந்தது.

அத்துடன் இது குறித்து ஆராய்ந்து 18 லீற்றர் சிலிண்டரின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சு கூறியிருந்தது.

இதற்கமைய குறித்த 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் நிறை 9 தசம் 5 கிலோவாக அமைய வேண்டும் எனவும், கொழும்பு மாவட்டத்துக்கான சில்லறை விலை ஆயிரத்து 150 ரூபாவாக அமைய வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சு தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

Developed by: SEOGlitz