மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிசாட் பதியுதீனின் வீட்டுப் பணிப்பெண் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் பலரிடம் வாக்குமூலம்பதிவு

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர்விவகாரப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் சிறுமியின் மரணம் தொடர்பில் அவரது தாயார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் மனைவியின் தந்தையிடம் நேற்று வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் குறித்த சிறுமியை அழைத்து வந்தநபரிடம் இன்று வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டுப்பணிப்பெண்ணான குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

இதனையடுத்து குறித்த சிறுமி , சிகிச்சை பலனின்றி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்

இதேவேளை குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz