மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு நகரின்  சில வீதிகளில் போக்குவரத்து நடைமுறையில் மாற்றம்

- Advertisement -

கொழும்பு நகரின்  சில வீதிகளில் இன்று முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ரொடுண்டா முச்சந்தியில் இருந்து ஆரம்பமாகின்ற உத்தராணந்த மாவத்தையில், அப்துல் மெக்கன்  மாக்கார் மாவத்தை நோக்கி மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பொலிஸ் தலைமையகத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி அப்துல் மெக்கள்  மாக்கார் மாவத்தை ஊடாக உத்தராணந்த மாவத்தைக்கு உட்பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது .

அத்துடன் சேர் ஜேம்ஸ் வீதியின் ஊடாக,பெரஹர வீதிக்கு உட்பிரவேசிக்கும் வாகனங்கள், ரொடுண்டா சுற்றுவட்டம்  நோக்கி பயணிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்பு பணிகள் காரணமாகவே இந்தத் தீர்மானம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் ஊடாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz