மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன.

- Advertisement -

அமெரிக்க தயாரிப்பான Pfizer  தடுப்பூசியின் மற்றுமொரு தொகை  நாட்டை வந்தடைந்துள்ளது.

 

- Advertisement -

இதன்படி 70 ஆயிரத்து 200  Pfizer  தடுப்பூசிகள் இன்று அதிகாலை 2.15 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்

 

இந்தநிலையில், குறித்த தடுப்பூசிகள் தற்போது விசேட லொறிகள் மூலம் களஞ்சியப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை, இலங்கைக்கு மேலும் 56 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் எதிர்வரும் வாரங்களில் வந்தடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களில் 3 குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச ரீதியில் கொரோனா தடுப்பூசிகளை விரைவாக செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் உள்ளதாகவும் இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை மக்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நடவடிக்கை இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்ட குறித்த பதிவுக்கு சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் பதிலொன்றை வழங்கியுள்ளனர்.

இதன்படி, சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, வெளிநாட்டு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது சர்வதேச கொள்கையாகும் என, இலங்கைக்கான சீனத் தூதரகம் பதில் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

 

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

Developed by: SEOGlitz