மெய்ப்பொருள் காண்பது அறிவு

மொடர்னா தடுப்பூசிகள் கண்டி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும்

- Advertisement -

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள மொடர்னா கொவிட் தடுப்பூசியை, கண்டி மாவட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும்  நிலையில், அதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இலங்கையில் கொவிட் தடுப்பு திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் 5வது தடுப்பூசி மொடர்னா என்பதோடு குறித்த தடுப்பூசியில் மேலும் ஒரு தொகை நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மேலும் 41 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்.

அதன்படி, 23 ஆண்களும் 18 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து  702 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 81 ஆயிரத்து 622 ஆக பதிவாகியுள்ளதோடு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்த்து 54 ஆயிரத்து 871 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கிளிநொச்சி – வட்டகச்சி பகுதியில் 15 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz