மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கான பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு

- Advertisement -

இந்தியா, தென் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கான விமான பயணங்களுக்கான  கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக இலங்கை சிவில் விமான அதிகார சபை தெரிவித்துளளது.

அத்துடன் குறித்த நாடுகளுக்குச் பயணிக்க  விரும்பும் இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமையாளர்கள்  மற்றும் இராஜதந்திரிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் சுகாதார பணிப்பாளர், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கையின் சிவில் விமானப் அதிகார சபையிடம் அனுமதி பெற வேண்டும் என  சிவில் விமானப் அதிகார சபையின் தலைவர்  உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும், அவர்கள் நாட்டிற்குள் பிரவேசித்தவுடன் ,   14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அவர்களுள் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட வேண்டும் என்றும் 14 நாட்களின் பின்னர் மீண்டும் இரண்டு தடவைகள்  பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட வேண்டும் எனவும் சிவில் விமானப் அதிகார சபையின் தலைவர்  உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டுதலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதன்படி பயணத் தடை விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இரண்டு  கொவிட் தடுப்பூசிகளை பெற்றுள்ள நிலையில்  இலங்கைக்கு வருகைதருபவர்கள் முதல் பிசிஆர் பரிசோதனை மூலம் கொவிட் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டால் 7 நாட்களுக்குப் பின்னர்  இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை போக்குவரத்து ஆலோசனைக் குழுவின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

புதிய வழிகாட்டுதல்களின் படி, பயணத் தடை இல்லாத நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் , முதல் பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படவில்லை  என உறுதிப்படுத்தப்பட்டால் தனிமைப்படுத்தப்படாது நாட்டிற்குள் பிரவேசிக்க வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் , 2 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 7 நாட்களுக்குப் பின்னர்  மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கான பயணத் தடை நடைமுறையில் உள்ள நிலையில் வியட்நாம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கையர்கள் அரசாங்கத்தின் அனுமதியுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும் எனவும் அரசாங்கத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்கள்  கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும்  சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய  சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz