மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் கெரோனா உருவாகவில்லை

- Advertisement -

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையால் இலங்கையில் கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மூன்றாவது கொரோனா அலையோ, இரண்டாவது கொரோனா அலையோ, அல்லது முதலவது கொரோனா அலையோ சுற்றுலா பயணிகளினால் ஏற்படவில்லை. சுற்றுலா பயணிகளினால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என இதுவரை சுகாதார பிரிவினால் அறிவிக்கப்படவில்லை. நாங்களும் அவ்வாறு ஒரு விடயத்தை தெரிவிக்கவில்லை நாங்க சுற்றுலா துறையை வழமைக்கு கொண்டுவருதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாயின் பாரிய நட்டத்தினை சந்திக்க நேரிடும். சுற்றுலா பயணிகள் இரண்டு கொரோனா தடுப்பூசி அளவுகளையும் செலுத்தியிருப்பார்களாயின் அவர்களுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்திலேயே பீ சீ ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு கிடைக்கின்ற பெறுபேறுகளுக்கு அமைய சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அது மாத்திரமின்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள்  உயிர்குமிழி முறைக்குட்படுத்தி சுற்றுலாவில் ஈடுபட செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தொற்றினை பரவுவதற்கு இடமளிக்காது செயற்படுவது தொடர்பிலேயே நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என்றார்

இதேவேளை,நாட்டில் டெல்ட்டா கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்திய ரஜ்சித் படுவத்துடாவ தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்க்பட்ட போதிலும் சூடெல்ட்டா கொரோனா தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் தொற்றுக்குள்ளாகும் நிலைமைக்காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் படிப்படியாகவே சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாகவும், மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் மாத்திரம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தளர்த்தப்படுவது அல்லது நீடிக்கப்படுவது குறித்து கொரோனா தொற்றின் நிலைமையை கருத்திற்கு கொண்டு  தீர்மானிக்கப்படும்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் டெல்ட்டா கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்திய ரஜ்சித் படுவத்துடாவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெற்றோர் மற்றும் பெரியவர்களின் கவனயீனம் காரணமாக சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நிலைமை அதிகரித்துள்ளதாக ரிச்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெற்றோர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தாலும் தமது வீடுகளில் உள்ள சிறுவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என்பதை மறந்து செயற்ப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறான  நிலையில், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ரிட்ச்வெ வைத்தியசாலையில் மாத்திரம் 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் கூறுகின்றார்.

மேலும், தடுப்பூசி என்பது, தொற்றினால்  ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காகவே என பெற்றோர்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சிறுவர்கள் தொடர்பில்  பெற்றோர்கள் அவதானமாக செயற்ப்பட வேண்மென ரிச்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz