மெய்ப்பொருள் காண்பது அறிவு

டவர் மண்டப அரங்கங்களை நாடக கலைஞர்களுக்கு சலுகை விலையில் வழங்கத் தீர்மானம்

- Advertisement -

மருதானை டவர் மண்டப அரங்க அறக் கட்டளையின் அரங்கங்களை, ஒகஸ்ட் 31ஆம் திகதி முதல் நாடக கலைஞர்களுக்கு சலுகை விலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

- Advertisement -

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற 297ஆவது நிர்வாகக் குழு கூட்டத்தில்,  டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதற்கமைய,  எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி முதல்,  டவர் அரங்கம், எல்ஃபின்ஸ்டன் அரங்கம் மற்றும் ருக்மணிதேவி அரங்கம் என்பவற்றை சலுகை விலைக்கு நாடக கலைஞர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை டவர் மண்டப அரங்க அறக்கட்டளையினால் செயற்படுத்தப்படும் பிரேக்ஷா காப்புறுதியை, 2022 ஆம் ஆண்டு முதல், நாடகத்துறையில் ஈடுபடும் அதிக எண்ணிக்கையிலான நாடக கலைஞர்களை உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மேலும்,புலத்சிங்கள – ஏகல்ஓயவில் அமைந்துள்ள பல்நோக்கு கட்டிடம் தற்போது பாவனையற்று கைவிடப்பட்டுள்ளதாக இந்த சந்திப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

ஜப்பானில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்...

Developed by: SEOGlitz