மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான தொடர் ஒத்திவைப்பு

- Advertisement -

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை ஒத்திவைக்கபட்டுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்தது.

- Advertisement -

இதற்கமைய எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வசே ஒருநாள் கிரிக்கட் போட்டி 17 ஆம் திகதியும் இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதியும், மூன்றாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இரு அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதியும், இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதியும், 3 ஆவது இருபதுக்கு இருபது போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்கள் இல்லாத நிலையில், ஆர் பிரேமதாச மைத்தானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை கிரிகெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் Grant Flower மற்றும் தரவுகள் தொடர்பான ஆய்வாளர் ஷிரந்த நிரோஷன் போன்றோர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லங்கா பிரிமியர் லீக் கிரிகெட் தொடரை, நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜுலை 29 ஆம் திகதி லங்கா பிரிமியர் லீக் தொடரை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், குறித்த தொடரை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதிவரை நடாத்த தற்போது தீர்மானிக்கபட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிகெட் தெரிவித்துள்ளது

இதன்படி, தொடரை ஒத்திவைப்பதின் ஊடாக , கிரிக்கெட் விளையாடும் முன்னணி நாடுகளில் இருந்து, மேலும் பல  வீரர்களை தொடரில் இணைத்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாத்திற்கு இடையிலான காலப்பகுதியில், சர்வதேச ரீதியில் ஒரே வகையான கிரிகெட் தொடர்கள் மற்றும் பல்வேறு சர்வதேச கிரிகெட் தொடர்கள் அட்டவனைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, லங்கா பிரிமியர் லீக் பேரவை அறிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz