மெய்ப்பொருள் காண்பது அறிவு

மில்லேவ பகுதியில் புதிய சிறைச்சாலை கட்டித்தை பார்வையிட்ட ஜனாதிபதி

- Advertisement -

கொழும்பு பொரளையில் அமைந்துள்ள சிறைச்சாலைகளை இடமாற்றம் செய்யும் திட்டத்திற்கு அமைவாக, ஹொரண மில்லேவ பகுதியில் புதிய சிறைச்சாலை கட்டிடம் அமைக்கப்படவுள்ள பகுதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கண்காணித்துள்ளது.

பழமையான சிறைச்சாலை கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள நெறுக்கடி மற்றும் ஏனைய காரணிகளை அடிப்படையாக கொண்டு சிறைச்சாலைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகளையும், அதனால் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்களை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்த வேண்டி மாற்றங்கள் குறித்தும், உரிய தரவுகளை வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய சிறைச்சாலைகளை அமைப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான ஹொரண மில்லேவ பகுதியில் உள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெலிகடை சிறைச்சாலை மற்றும் கொழும்பு மெகஸின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, சிறைச்சாலை வைத்தியசாலை, பயிற்ச்சி நிலையம், சிறைச்சாலை புலனாய்வுபிரிவு ஆகியன இவ்வாறு புதிய சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன.

இதேவேளை, சிறைச்சாலை கைதிகளின் உரிமைகள் மற்றும் நலனை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஹொரண மில்லேவ தோட்ட பகுதியில் வாழும் மக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, சொத்துக்கள் மற்றும் குடியிருப்புகளை இழக்கும் மக்களுக்கு தேவையான நட்டயீடு மற்றும் மாற்று வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz