மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிகெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்

- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் கிரிகெட் தொடரில் இருந்து, இலங்கை கிரிகெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, பிரதம பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரே, இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிகெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வாவை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

இலங்கை கிரிகெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் Grant Flower மற்றும் தரவுகள் தொடர்பான ஆய்வாளர் ஷிரந்த நிரோஷன் போன்றோர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த தொடருக்காக, தற்காலிக பிரதம பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz