மெய்ப்பொருள் காண்பது அறிவு

15 வயது சிறுமி விவகாரம் – நால்வருக்கு பிணை

- Advertisement -

கல்கிஸ்ஸை பகுதியில், இணையத்தளம் ஊடாக 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மிஹிந்தலை பிரதேச சபை உப தலைவர் உட்பட நான்கு பேருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கபட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், மாணிக்ககல் வியாபாரி, கடற்படை வைத்தியர் மற்றும் குறித்த சிறுமி பற்றிய தகவல்களை இணையத்தளம் ஊடாக வெளியிட்ட ஒருவரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

சந்தேகநபர்கள் தலா 25 ஆயிரம் ரூபா பிணை மற்றும் 25 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நபர்கள் இன்று அடையாள அணிவகுப்பில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டதுடன், இதனை தொடர்ந்து அவர்கள் சிறுமியால் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும், குறித்த சிறுமி பற்றிய தகவல்களை இணையத்தளம் ஊடாக வெளியிட்ட மற்றொரு வலைத்தளத்தின் உரிமையாளரை  இந்த மாதம் 20 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மடுல்சீமை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்திய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சிறுமி தற்போது கர்ப்பம் தரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுமியை மறைத்து வாய்த்திருந்த குற்றச்சாட்டில், சிறுமியின் தாயாரும் கைது செய்யப்ட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz