மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி வழங்குவது குறித்து புதிய திட்டத்தை உருவாக்கிய ஜனாதிபதி

- Advertisement -

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் நாட்டிலுள்ள அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டமொன்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.

தடுப்பூசி வழங்கல் மற்றும் கொரோனா தடுப்பு செயலணியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை முன்வைத்தார்.

- Advertisement -

இதன்படி, கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்தமாத இறுதிக்குள்  கிடைக்கும் தடுப்பூசிகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஜுலை 11 ஆம் திகதி 2 மில்லியன் சினர்பம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதனை, கொழும்பு மாவட்டத்திற்கு 2 இலட்சம் தடுப்பூசிகளும், கம்பஹா மாவட்டத்திற்கு 5 இலட்சம் தடுப்பூசிகளும், களுத்துறை மாவட்டத்திற்கு 3 இலட்சம் தடுப்பூசிகளுமாக பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு அமைவாக மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதை கடந்த அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி வழங்கபட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம்,நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு இலட்சம் சினர்பம் தடுப்பூசிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

அத்துடன், குருணாகலை மாவட்டத்திற்கு 2 இலட்சம் தடுப்புசிகளும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்குமாறும் சுகாதார தரப்புக்கு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1.47 மில்லியன் எஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசிகள் அடுத்தவாரமளவில் நாட்டுக்கு கிடைக்கும் எனவும், அதில் 7 இலட்சம் தடுப்பூகளை கொழும்பு மாவட்டத்திற்கென ஒதுக்கப்படவுள்ளது.

மீதமான எஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசிகளை கேகாலை மாவட்டத்திற்கு முதலாம் மற்றும் இரண்டாம் அளவுகளுக்காக பயன்படுத்தப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நாட்டுக்கு கிடைத்துள்ள பைசர் தடுப்பூசிகளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும், மொடர்னா தடுப்பூசிகளை கண்டிக்கும் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் பெரும்பாளும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதன் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகளுக்கு வேண்டி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz