மெய்ப்பொருள் காண்பது அறிவு

போலிக்காரணங்களும் வாதப்பிரதிவாதங்களும்

- Advertisement -

தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் பொதுமக்கள் கைது செய்யப்படுகின்றமை அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது என சுட்டிக்காட்டப்பட்டதுடன், நாடாளுமன்றில் இன்று வாதபிரதிவாதங்களும் இடம்பெற்றன.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் தனிமை படுத்தலை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் தராதரம் பாராமல் கைது செய்யபடுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதில் அளித்தார்.

 

இதேவேளை,  தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய விதிமுறைகளை இணைக்கும் பொழுது அடிப்படை மனித உரிமைகளை உள்ளடக்கிய சட்டம் அமைக்கப்படவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.

 

இதனிடையே தனிமை படுத்தல் சட்டம் என்ற பெயரில் அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார்.

அத்துடள், சுகாதார பணிப்பாளரினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் வழிகாட்டல்  அறிக்கை அரசியல் சதியாகுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸ்ஸநாயக தெரிவித்துள்ளார்

அத்துடன் சுகாதார பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளே பொலிஸாரினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதன் போது பதில் அளித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர்கள் கடமைகளை பெறுபேற்கும் நிகழ்வுகளுக்கு தனிமைபடுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாதா என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர கூறும் விடயத்தை, நாட்டின் அனைத்து மக்களின் சார்பிலும் முறைப்பாடாக சபையில் பதிவுசெய்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

அத்துடன், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற பிரவேசம் மற்றும் அமைச்சராக பதவியேற்றமையை தொடர்பான ஆதரவை தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைவாகவே மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கடிதம் என தெரிவிக்கப்படும் போலி ஆவணத்திற்கு க்கடிதத்திற்கு அமைவாகவே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz