மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெட்டுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மொரட்டுவை ஆய்வு மையத்துக்கு  அனுப்பிவைப்பு

- Advertisement -

வவுனியாவில் வெட்டுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவை வைத்திய ஆய்வு மையத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டின் பின்புறத்தில் வெட்டு காயங்களுடன் குறித்த  சிறுவன்   சடலமாக  நேற்று    கண்டெடுக்கபட்டிருந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவனின் குடும்பத்தினரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், சிறுவனின் சடலம்  பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என வவுனியா மாவட்ட வைத்தியசாலை உறுதிபடுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வவுனியா சட்ட வைத்திய அதிகாரி  குணரட்ண மற்றும் பொலிசார் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கள்  முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும், மேலதிக தகவல்கள் தேவைப்பட்டமையால் சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக மொரட்டுவை வைத்திய ஆய்வு மையத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்ற நிலையில்,  சடலத்தை எரிக்காமல் புதைக்குமாறு   சட்ட வைத்திய அதிகாரியால் அறிவுறுத்தப்பட்டு, சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz