மெய்ப்பொருள் காண்பது அறிவு

பசில் ராஜபக்சவிற்கு உரிய அமைச்சு பொறுப்பு வழங்க வேண்டும் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

- Advertisement -

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பசில் ராஜபக்ச நாளை மீண்டும் நாடாளுமன்றிற்கு பிரவேசிக்க உள்ளதுடன்,  ஆளும் தரப்பிற்குரிய முன்வரிசையில் 9 ஆவது ஆசனம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியமையை தொடர்ந்து குறித்த பதவிக்கான வெற்றிடம் நிலவுவதாக நாடாளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணைக்குழவிற்கு வருகை தந்த ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் பெயரை ஜயந்த கெட்டகொடவின் வெற்றிடத்திற்கு பரிந்துரை செய்தார்.

மேலும்,  ஜயந்த கெட்டகொடவின் பதவி விலகல் தொடர்பில் நாடாளுமன்றின் பொது செயலாளர் தம்மிக்க தசநாயக்க நாடாளுமன்றிற்கு இன்றைய தினம் அறிவித்தார்.

இந்நிலையில் குறித்த வெற்றிடத்தினை பூர்த்தி செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழவின் உறுப்பினர்கள் இன்று முற்பகல் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தனர்.

தேர்தல்கள் ஆணைக்குழவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தலைமையில் ஒன்று கூடிய குறித்த ஆணைக்குழு, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் பெயரை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டது.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினாராக பசில் ராஜபக்ச நளை பதவிபிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்சவிற்கு உரிய அமைச்சு பொறுப்புக்களை வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எச் எம் எம் ஹரிஸ் தெரிவிக்கின்றார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz