மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்கள்

- Advertisement -

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எதிர்பார்க்கப்பட்ட விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

சித்திரவதை, வேறு கொடூர மற்றும் தண்டித்தல் தொடர்பான திருத்த சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல தொடர்ந்தும் உரையாற்றுகையில்

நாட்டு மக்களும் சர்வதேசமும் இதனை எதிர்பார்க்க வில்லை.  19 ஆவது திருத்தத்தின் ஊடாக நீதிமன்றங்கள் சுயாதீன மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனங்கள் சுயாதீனமாக்கப்பட்டன. இவற்றை இல்லாது செய்து அதிகாரத்தை ஒருவரிடம் வழங்கியதன் பின்னர் நீதிமன்றம் மற்றும் ஜபநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக எப்படி கூறமுடியும்.  20 ஆவது திருத்தம் காரணமாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய விமர்சனங்கள் ஏற்ப்பட்டுள்ளன. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றறை ஆண்டுகளுக்குள் இரண்டு  சர்வதேச இலங்கைக்கு எதிராக குற்றம்சுமத்தியுள்ளனர். அமெரிக்க கொங்ரஸ்ஸில் இலங்கையிக் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தமிழர் தாயகமாக ஏற்றுக்கொள்ளுமாறு யோசனை முன்வைக்க்பட்டுள்ளது.  இதேபோன்றுதான் இஸ்ரேல் உருவாக்கப்படவேண்டுமென்ற டேகாரிக்கை முன்வைக்கப்பட்டு 30 ஆண்டுகளில் அந்த நாடு தோற்றம்  பற்றது. ஆகவே இந்த விடயங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டதம்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

நீதி அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி அவர்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முக்கிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். ஆனால் எமது சுயாதீனத்தை விட்டுக்கொடுக்காது. தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.  அத்துடன் செய்ய வேண்டிய மற்றும் முடிந்த விடயங்கள் குறித்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.  பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும் தேசிய பாதுகாப்புக்காக அதில் உள்ள விடயங்கள் பலப்படுத்துவதுடன், மனித உரிமை தொடர்பான விடயங்களை பாதுகாப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தினால் அமைச்சரவை ஊடாக குழுவொன்றும் ஸ்தாபிக்க்பட்டுள்ளது.

அத்துடன், சித்திரவதை, வேறு கொடூர மற்றும் தண்டித்தல் தொடர்பான திருத்த சட்டமானது தற்போது நிறைவேற்றப்படுவதற்கான காரணம் என்னவென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சபையில் கேள்வியெழுப்பினார்.

எம் ஏ சுமந்திரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

நீதவான்கள் பொலிஸ் நிலையத்துக்கு விஜயம் செய்து, அதாவது பொலிஸ் நிலையங்களுக்கு மட்டுமின்றி தடுப்புக் காவல் நிலையங்களுக்கும் விஜயம் செய்து, சந்தேக நபர்கள் முறையாக நடத்தப்படுகிறார்களா என்று பரிசோதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக குறித்த இடத்தில் சித்திரவதைகள் அல்லது மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். சட்ட திருத்தத்தின் படி இது ஒரு சிறந்த நகர்வு. ஆனால் இந்த விடயம் ஏன் இப்போது கொண்டு வரப்படுகிறது என ஆச்சரியமாக உள்ளது. எமது நாட்டில் சித்திரவதைகள் தொடர்பில் எவரேனும் அறிந்திருந்தால் ஏன் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்பது தொடர்பில் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் சர்வதேசத்தில் இவ்வாறான விம்பத்தை உருவாக்கி யாரை முட்டாளாக்கப் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.

இதேவேளை, நாட்டுக்கு அவசியம் என்ற காரணத்தினாலேயே இந்த சட்டமானது அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்

ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தங்களுக்கு மாத்திரம் இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை. அவர்களின் வறலாற்றை பார்க்ககும் போது மற்றுமொரு நாட்டின் ஜனநாயகத்தை உறுதிசெய்ய வேண்டுமென குறிப்பிட முடியாது. ஆனால் நாங்கள் இதனை கொண்டுவருவது  நாட்டுக்கு அவசியமானது என்பதன் காரணமாகவே. தர்மம் குறித்து பேசும் நாடு மாத்தரம் நாம் கிடையாது அதனை நடைமுறைப்படுத்தும் அ ல்லது பின்பற்றும் நாடாகும். இது தவறானது என யாரும் கூறுவார்களாக இருந்தால் அவர்களுக்கு ஒன்று கூறவேண்டும். 30 வருடமாக நாட்டின் சட்டத்தை மீறி, அநீதியான விதத்தில் செயற்ப்பட்ட காலத்தை நாம் இல்லாது செய்துள்ளோம்.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் விடயங்களை புலம்பெயர் தரப்பினர் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதாகவும், இதனால் நாட்டின் சுயாதீனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் கொண்டுவரும் விடயங்களை புலம்பெயர் தரப்பினர் அதனை தாங்கள் இருக்கும் நாடுகளில் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர்.  அதனால் நாட்டுக்கு எற்படும் பாதி ப்புகள் தொடர்பில் நாம் பேசுவதில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பேசும் விடயங்களே இவ்வாறு புலம்பெயர் தர ப்பினால் எடுத்துக்கொள்கின்றனர். அதனை புலம்பெயர் அரசியலுக்காக பயன்படுத்திகொள்கின்றனர். 2019 ஆண்டு ஏற்பரல் முதல் இந்த விடயம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இலங்கையை தங்களின் விருப்பத்திற்கு செயற்படுத்தும் நோ க்கில் தற்போது நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது.  இதனால் சுயாதீன ரீதியில் நாட்டை கொ ண்டு செல்ல முடியாத நிலைமை தற்போது ஏ ற்ப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது மனிதவுரிமை ஆணைக்குழுவின் அழுத்தங்களுக்காக குறித்த சட்டம் திருத்தப்படுவதை காட்டிலும், நாட்டு மக்களின் உரிமைக்காக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்

ஐரோப்பிய ஒன்றியம் அல்லது மனிதவுரிமை ஆணைக்குழுவின் அழுத்தங்களுக்குஅமைய இந்த விடயங்கள் முன்னெடுக்கப்டுவதை விட நாட்டுக்காக இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த கா லத்தில் அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இதிலே மகாசங்கத்தினரும் எதிர்த்த ஒரு விடயம் தான் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவது பொருத்தமற்றதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதியாக அமெரிக்க பிரஜை ஒருவர் நியமிக்கப்படுவது தொடர்பில் பொதுமக்களும் எதிர்ப்பினை தெரிவித்தனர். ஆனால் பெசில் ராஜபக்ஸவுக்காக இந்த மாற்றம் கொ ண்டுவரப்பட்டது.  நாட்டு மக்களின் உரிமைகள் தனி ஒருவருக்காக மாற்றம் செய்வது பாரதூரமானது. ஆனால் 21 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் போது அதற்கான மாற்றங்கள் ஏ ற்படுத்தப்படும். அத்துடன். இந்த சரத்து நீக்கப்படுமென குறிப்பிடப்பட்டது.  அப்போது அதற்காக வாக்களிக்குமாறு குறிப்பிட்டு ஏ மாற்றப்பட்டனர். இப்போது இரட்டை பிரஜாவுரிமை உள்ள அந்த நபர் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு நடவடி க்கை எடுக்க்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz