மெய்ப்பொருள் காண்பது அறிவு

பசில் ராஜபக்சவின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணம் கிடைத்துள்ளது

- Advertisement -

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஸவை நியமிப்பதற்காக அவரது பெயர் அடங்கிய ஆவணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த  கெட்டகொட தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

- Advertisement -

ஜயந்த  கெட்டகொட தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினமா செய்வதாக  எழுத்து மூலம் இன்று அறிவித்ததாக நாடாளுமன்ற  தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள  ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆனைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஸவை நியமிப்பதற்காக அவரது பெயர் அடங்கிய ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியல் மேடைகளிலும் பசிலின் நாடாளுமன்ற பிரவேசம் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இவ்வாறு கருத்துரைத்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்

பசில் ராஜபக்ச அலாவுதீனின் புதின விளக்கு என சிலர் தெரிவிக்கின்றனர். அவர் அலாவுதீனின் புதிய விளக்கு அல்ல. ஆனால் எதிர்கட்சியினர் எதிர்பார்க்காத நேரத்தில் நாடே எதிர்பார்க்காத நேரத்தில் எவராலும் நினைத்துக்கூட பார்க்க இயலாதவற்றை செய்து காட்டும் விசேட ஆற்றல் கொண்டவரே பசில் ராஜபக்ச ஆவார். ஏனையவர்களின் தேவைக்காக அல்ல. கட்சி என்ற வகையில் எங்களுக்கு அதிக தேவை காணப்படுகின்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமரை உருவாக்கிய அரசாங்கத்தை உருவாக்கிய ஒருவர் வெளியிலிருந்து பணியாற்றுவதை தவிர்த்து அமைச்சரவை அதிகாரம் கொண்டு அமைச்சர் ஒருவராக அவர் நாடாளுமன்றிற்கு வருகை தரும் போது எதிர்கட்சியினர் அறிந்து கொள்வார்கள். நாடு தொடர்பில் சிந்தித்தே தீர்மானங்களை மேற்கொள்பவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டிற்காக முடியுமானவரை பணியாற்றியவரே பிரதமர் மகிநந்த ராஜபக்ச, அதனை போன்றே நாடு தொடர்பில் நன்கு கற்றறிந்த, நாட்டின் அடிமட்டம் முதல் உயர் மட்டம் வரை அறிந்தவர், 14500 கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பிலும், நன்கறிந்த ஒருவர் எமது கட்சியில் இருக்கின்றார் என்றால் அவர் பசில் ராஜபக்ச என்ற ஒருவர் மாத்திரமே. எதிர்வரும் 8 ஆம் திகதி அவர் நாடாளுமன்றிற்கு வருகை தரும் போது சிலருக்கு நடுக்கம் ஏற்படும் அந்த சந்தர்ப்பத்தில் எதிர்கட்சி அமைதியாக செயற்பட்டால் நாடு வழமைக்கு திரும்பும் என்பதோடு, அனைத்து தரப்பினரையும் சமநிலையாக பேணக்கூடிய ஒருவரே பசில் ராஜபக்ச ஆவார்.

இதேவேளை அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தினருக்கு ஏற்றவாரே அமைச்சுக்களை நியமித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜே சி அலவத்துவல தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

இந்நிலையில் பலர் தமது அமைச்சுப் பொறுப்பிலிருந்து  விலகிக்கொண்டுள்ளமையும் பசில் ராஜபக்சவிற்கு அமைச்சு பொறுப்புக்களை வழங்குவதற்கே எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜே சி அலவத்துவல குற்றம் சுமத்தியுள்ளார்.

அது மாத்திரமின்றி தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதிலேயே அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவதாகவும் மக்களின் பிரச்சினை குறித்து அக்கறை செலுத்துவதில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் பசில் ராஜபக்ச அல்ல ராஜபக்சவினர் எத்தனை பேர் வருகை தந்தாலும் நாட்டின் தற்போதைய நிலையை மாற்ற இயலாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே சி அலவத்துவல குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz