மெய்ப்பொருள் காண்பது அறிவு

மசாஜ் நிலையங்களை திறப்பதற்கு விசேட காரணங்கள் இல்லை

- Advertisement -

நாட்டில் மசாஜ் நிலையங்களை திறப்பதற்கான விசேட காரணங்கள் எதுவும் கிடையாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் கடுமையான சுகாதார வழிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட போதிலும், தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டம் கட்டமாக குறைவடைந்து வருவதை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

- Advertisement -

அரசாங்கம், மதஸ்தலங்களை மூடி, மசாஜ் நிலையங்களை திறந்துள்ளதாக எதிர்க் கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையிலேயே, விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம் எட்டப்படும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுப்பார்கள் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

மேலும், புதிய சுகாதார வழிகாட்டலின் பிரகாரம், விடுதிகள், சூதாட்ட நிலையங்கள், இரவு நேர களியாட்ட விடுதிகள், மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய சுகாதார வழிகாட்டல் 14 நாட்களுக்கு மாத்திரமே செல்லுப்படியாகும் என  பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz