மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்

- Advertisement -

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறைக் கைதிகள்  72 பேர் உள்ளிட்ட 116 பேருக்கு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் மற்றும்
பி சி ஆர் பரிசோதனைகள் ஊடாக குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதன்படி, மட்டக்களப்பு சிறைக்கைதிகள் 72 பேரும்,  பொலிஸார்  இருவரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 15 பேரும், களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி , காத்தான்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்ம், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும்  இவ்வாறு  தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரண்டு உயிரிழப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆரையம்பதி மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு  உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz