மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்கிஸ்ஸையில் 15 வயது சிறுமி துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை ஒருவர் கைது .

- Advertisement -

கல்கிஸ்ஸை பகுதியில், இணையத்தளம் ஊடாக 15 வயது சிறுமியை விற்பனை செய்த மற்றும் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேலும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியை விற்பனை செய்வதற்கு விளம்பரம் மேற்கொண்ட இணையத்தளத்தின் உரிமையாளர் மற்றும்  நிதி முகாமையாளர் உட்பட பாலியல் தொழில் நிமித்தம் குறித்த சிறுமியை பணம் கொடுத்து கொள்வனவு செய்த மாலைதீவு பிரஜை ஒருவரும் மற்றும் பாலியல் தொழிலுக்காக அனுமதி வழங்கிய ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

- Advertisement -

அத்துடன் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்ட 4 இணையதளங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில வைக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 32 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக , பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதுடன் ஏனைய , 6 பேர் சிறுமியை கடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பிரகாரம் மேலும் 12 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz