மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆடம்பர பொருட்களுக்கான தடை தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது

- Advertisement -

ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதிக்கு அரசு தடை விதித்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை என திறைசேரிச் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல நிராகரித்துள்ளார்.

ஆடம்பரப்பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கு அல்லது இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

- Advertisement -

மேலும், அந்நிய செலாவணி சீர் செய்யப்பட்டதன் பின்னர் இறக்குமதிக்கான வரையறைகளை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதிக்கு அரசு தடை விதித்திருப்பதாக வெளியான தகவல்களில் எந்தவித உண்மைதன்மையும் கிடையாது என திறைசேரிச் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல நிராகரித்துள்ளார்.

தொலைக்காட்சி , கைத்தொலைபேசிகள் மற்றும் தொழிநுட்ப இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றை நாட்டிற்கு  இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால்  தீர்மானம் எடுக்கப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நாளைய தினம் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசாங்கத்தின்  நிர்வாகத்தன்மை  தோல்வி  கண்டுள்ளதனை பொதுமக்கள் நன்கு உணர்ந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த  நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன  இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகைக்கு பின்னர் முன்னேற்றகரமான பல  மாற்றங்கள் ஏற்படும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz