மெய்ப்பொருள் காண்பது அறிவு

மதுபானம் தயாரிக்க அனுமதி வழங்கிய அரசாங்கம் தடுப்பூசி தயாரிப்பிற்கு வழங்கவில்லை

- Advertisement -

கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு பதிலாக, அரசாங்கம் தனியார் நிறுவனமொன்றுக்கு  மதுபானம் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

- Advertisement -

அத்துடன், பல்வேறு அமைச்சர்கள் தடுப்பூசி வழங்குவதற்காக ஆதாரமற்ற மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறான அமைச்சர்கள் தடுப்பூசியை உற்பத்தி செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டொலர் இருப்பு பற்றாக்குறை மற்றும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய முடியாது என்பதனை அரசாங்கம் மக்களிடம் ஒப்புகொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரசாயன உரங்களுக்குப் பதிலாக சேதன பசளையை ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கம் பொது மக்களை சிரமத்திற்குள்ளாக்குவதுடன், மக்களை ஏமாற்ற வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருநாதிலக்க  தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz