மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாதியர்களின் கோரிக்கைகளில் ஐந்தினை நிறைவேற்ற தீர்மானம்

- Advertisement -

அரச ஐக்கிய தாதியர் சங்கத்தினர் முன்வைத்துள்ள ஏழு கோரிக்கைகளில் ஐந்திற்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

மீதமுள்ள இரண்டு கோரிக்கைகளுக்கும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் ஊடக தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

- Advertisement -

அரச ஐக்கிய தாதியர் சங்கத்தினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுதல், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கைவிடப்பட்ட ஊழியர்களின் நிலையை மீட்டெடுப்பது, கைவிடப்பட்ட மூன்றாம் வகுப்பில் இருந்து இரண்டாம் வகுப்பிட்கு ஐந்து ஆண்டுகளுக்கும், இரண்டு முதல் முதலாம் வகுப்பினருக்கு ஏழு ஆண்டுகளுக்கும் பதவி உயர்வு வழங்கல், உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்அத்துடன், ஆண்டு ஒன்றுக்கான சீருடை கொடுப்பனவு 20 ஆயிரம் ரூபா வழங்குதல், தற்போதைய 36 மணிநேர வேலை நேரத்தை வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு 30 மணி நேரமாக மாற்றுவது தொடர்பில் சிறப்புக் குழு ஒன்றினை நியமித்தல் ஆகிய கோரிக்கைகளுக்கும், உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன், 2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சினால் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 10 ஆயிரம் ரூபா உதவித்தொகையும், அடிப்படை சம்பளத்தில் நூற்றுக்கு 1 என்ற விகிதத்தில் கூடுதல் சேவை கொடுப்பனவும் வழங்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்..

சுகாதாரத் துறையில் அரசாங்கத்திற்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும், தாதியர் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்குமாறும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz