மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருளதார பாதிப்புக்களிலிருந்து மீள நாடு வழமைக்கு திரும்ப வேண்டும்

- Advertisement -

நாட்டில் தற்போது ஏற்ப்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீண்டெழுவதற்கு, நாட்டை முழுமையாக மிக விரைவாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்ட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார முன்னேற்றம் குறித்து தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நிலைமையை தொடர்ந்தும் பாதுகாப்பது அவசியமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தடுப்பூசி பெற்றுக்கொடுப்பது மிகவும் அத்தியாவசியமானது என்பதுடன், அவை மேலும் துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடர்ந்தும் ஒரு நிறுவனம் மூடப்பட்டிருக்கும் நிலையில், அதனால் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலைமைகளினால் அரசாங்கத்திற்கான வரி வசூலிப்புகள் பாதிக்கப்படும் என்பதுடன், அதனால் அரசாங்கத்ற்கு பாரிய இழப்பு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz