மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

- Advertisement -

அம்பாறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி, அம்பாறை  மாவட்டம்  கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட    மருதமுனை 3   கிராம உத்தியோகத்தர் பிரிவு   விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  கேகாலை மாவட்டத்தின் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிஹிப்பிட்டிய  கிராம உத்தியோகத்தர் பிரிவின் மாதெய்யாவ கிராமம் தனிமைப்படுத்தலிலி இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  ரத்தினபுரி மாவட்டத்தின் ரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவாகல மேற்பிரிவு  அத்துடன் கண்டி மாவட்டத்தின் விஹாரை ஒழுங்கை,  விஹாரை வீதி , கப்பர  தேவாலய வீதி, வெலமெத பரகம   , சுதுஹம்பல கிழக்கு ஆகிய கிராம உத்தியோக்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக  ராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா  மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz