மெய்ப்பொருள் காண்பது அறிவு

சேதன பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு விசேட கொடுப்பனவு!

- Advertisement -

பெரும்போகத்திற்கான நெற் செய்கையின் போது, விவசாயிகள் உரத்தை தயாரித்து பயன்படுத்தும் நடவடிக்கையினை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, சேதன பசளைகளை தயாரித்து, விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்டேயர் ஒன்றுக்கு 12 ஆயிரத்து 500 ரூபா வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இரண்டு ஹெக்டேயர்களுக்கு மேற்படாத வகையில் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு விவசாய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 8 இலட்சம் ஹெக்டேயர் அளவில் பெரும்போக நெல் உற்பத்திக்கான சேதன பசளையினைத் தயாரிப்பதற்கான வேலைத்திட்டமொன்று விவசாய அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கமநல சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டல்களுக்கமைய விவசாயிகள் தரமான சேதன பசளையினை தயாரிப்பதற்கும், அனுமதிபத்திரம் பெற்ற உர உற்பத்தியாளர்களின் உற்பத்தியினை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz