மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார வழிமுறைகள் அடங்கிய புதிய சுற்றறிக்கை – முழு விபரம் உள்ளே…!

- Advertisement -

நாடளாவிய ரீதியில்  நாளை வரை நீடிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரை  பின்பற்றப்பட வேண்டிய  நடைமுறைகள் தொடர்பான  புதிய   சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

- Advertisement -

பொது போக்குவரத்து சேவை 50 வீதமானவர்களுக்கு மாத்திரமே பயணம் செய்ய முடியும் எனவும்
தனியார் அல்லது வாடகை வாகனங்களில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. .

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவையான உத்தியோகத்தர்களை மாத்திரம் கடமையில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டங்கள் 10 பேரை மட்டுப்படுத்திய நிலையிலேயே இடம்பெறவேண்டும்.

பயிற்சி பட்டறை, கூட்டங்கள் ஆகியனவற்றிற்கு தேவையேற்படின் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், திருமண பதிவுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10  மணமக்கள் உள்ளிட்ட 10 பேருடன்  திருமண பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத வழிபாட்டு தலங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் அடகு விற்பனை நிலையங்கள் நாளை திறக்கப்படும் என்பதோடு, 10 வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் சேவைவழங்கஅனுமதிக்கப்பட்டுள்ளது.

சிகையலங்கார நிலையங்களில் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் போன்றவற்றில்  3 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் ஒரே நேரத்தில் சேவை வழங்கப்பட வேண்டும்

ஒருவர் உயிரிழந்தால் சடலத்தை பொறுப்பேற்று 24 மணித்தியாலங்களில் இறுதி சடங்குகளை முன்னெடுக்க வேண்டும். 15 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும்
.
திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரை, நீச்சல் தடாகங்கள், Pub, Bars, கெசினோ, களியாட்ட விடுதிகள், தொடர்ந்தும் மூடப்படுவதுடன் Spa திறக்கப்படும்.

ஹோட்டல்கள், ர்ஸ்ட்டராண்ட்கள் திறந்து காணப்படுவதுடன், குறித்த இடங்களில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட வேண்டும்.

ஆகிய விதிமுறைகள் உள்ளிட்ட 47 விதிமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz