மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவின் தடுப்பூசிகளுக்கு சில ஆசிய நாடுகள் எதிர்ப்பு

- Advertisement -

கொரோனா தொற்றுக்கு எதிரான சீனாவின் தடுப்பூசிகளை எதிர்காலத்தில் தாம் பயன்படுத்தப் போவதில்லை என சில ஆசிய நாடுகள் தெரிவித்துள்ளன.

சீனாவின் சைனபாம் மற்றும் சினோவக் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்திய ஆசிய நாடுகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

- Advertisement -

சீன தடுப்பூசியின் செயற்திறன் தொடர்பில் தற்போது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஏற்கனவே சீனாவின் தயாரிப்பான சினோவக் தடுப்பூசிகளை பயன்படுத்திய தாய்லாந்து அதனைப் புறக்கணித்து இருந்தது

அத்துடன் இந்தோனேசியாவும் மொடேர்னா தடுப்பூசியுடன் இணைந்து சீனாவின் தயாரிப்பான தடுப்பூசிகளை பயன்படுத்தவுள்ளது.

சீனாவின் இரண்டு வகையான தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தாய்லாந்தும் இந்தோனேசியாவும் குறிப்பிட்டுள்ளன.

இரண்டு வகையான தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என தாய்லாந்தின் மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் கம்போடியா போன்ற நாடுகள் தொடர்ந்தும் சீனாவின் தடுப்பூசிகளையே பயன்படுத்துகின்றன.

இதேவேளை 30 க்கும் அதிகமான ஆசிய நாடுகள் சீனாவின் தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz