மெய்ப்பொருள் காண்பது அறிவு

இதுவரை 25 பேர் கையொப்பம் இட்டுள்ளனர் – மெத்தீவ்ஸ் இன் அதிரடி தீர்மானம்

- Advertisement -

இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கான உடன்படிக்கையில் இதுவரை 25 இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் கையொப்பம் இட்டுள்ளனர் என ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுடன் 3 இருபதுக்கு இருபதுக்கு போட்டிகளிலும், 3 சர்வசே ஒரு நாள் போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.

- Advertisement -

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் எதிர்வரும் ஒரு வருட காலத்திற்கு கைச்சாத்திட மறுப்பு தெரிவித்து வந்தனர்.

எனினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்றிருந்த இலங்கை அணி வீரர்கள் 21 பேர் நேற்று பிற்பகல் நாடுதிரும்பியிருந்த நிலையில், 12 பேர் மாத்திரம் இந்தியாவுடனான போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தனர்.

அத்துடன், ஏனைய வீரர்களுக்கு இன்று காலை வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 25 பேர் கைச்சாத்திட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் டெஸ்ட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் அனைத்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் விலகுவதற்கு ஆலோசித்து வருவதாக ஸ்ரீ கிரிக்கட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அனைத்து சர்வதேச போட்டிகளிலிருந்தும் விலகுவது தொடர்பில் ஆலொசித்து வருவதாகவும் தமது தீர்மானத்தில் அடுத்த வாரமளவில் அறிவிப்பதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கட்டிற்கு அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz