மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐவர் அடங்கிய குழாம் நியமனம் – மூவருக்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்

- Advertisement -

இலங்கை கிரிக்கட் அணியின் மூன்று வீரர்கள் உயிர்குமிழி முறையினை மீறி செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐவர் அடங்கிய குழாம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்றிருந்த இலங்கை அணியின் வீரர்கள், குசல் மெண்டிஸ், தனுஸ்க்க குணதிலக்க, நிரோசன் திக்வெல்ல ஆகியோர் உயிர் குமிழி முறையை மீறிச்செயப்பட்டிருந்தனர்.

- Advertisement -

இதனையடுத்து அவர்களை நாட்டிற்கு அழைத்துள்ள ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம், அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் முன்னதான அறிவித்திருந்தது.

இதற்கமைய, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர், நிமல் திசாநாயக்க, சட்டத்தரணிகளான பண்டுக்க கீர்த்தினந்த, அசேல ரேக்கவ, உச்சித்த விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற முன்னாள் மேஜர் எம் ஆர் டி டப், சொய்சா ஆகியோர் அடங்கிய குழாம் நியமிக்கப்பட்டுள்ளதோடு, விசாரணைகளும் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz