மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா ஒழிப்பு தொடர்பில் புதிய வர்த்தமானி

- Advertisement -

கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அத்துடன் கொரோனா ஒழிப்பிற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

- Advertisement -

அத்துடன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் 135 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோளா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஆயிரத்து 639 பேர் முழுiமாக குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 12 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் இதுவரை தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 46 ஆயிரத்து 109 ஆக காணப்படுகின்றது.

அத்துடன், 30 ஆயிரத்து 580 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை – வெலிமடை – சுகாதார வைத்திய அதிகாரி பிரவிற்குட்பட்ட ஹுலங்கபொல்ல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளங்காணப்பட்டுள்ள அனைவரும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

மேலும், அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 47 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz