மெய்ப்பொருள் காண்பது அறிவு

துமிந்தவின் விடுதலைக்கு எதிராக கண்டனங்கள்..!

- Advertisement -

பாரதலக்‌ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் குற்றவாளியாக தண்டனையளிக்கப்பட்ட துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் பலரும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் கொலை வழக்கின்  குற்றவாளியென நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில்   துமிந்த சில்வா கடந்த ஆண்டு 2016 ஆம் ஆண்டுமுதல் ஆயுள் தண்டனை கைதியாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

இந்தநிலையில், 7 நீதிபதிகளால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட  துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டுள்ள பாரதலக்‌ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா, அரசாங்கத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொலையாளி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நீதியை மதிக்காத ஒரு நாட்டின் மீது சூரியன் பிரகாசிக்காது எனவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளை அவமதித்து நீதித்துறையை மதிக்காத ஒரு நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

பொசன் போயா தினமான இன்றைய நல்ல நாளில் இவ்வாறான சம்பவம் நடந்தது கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது, ட்விட்டரில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தமிழ் கைதிகளின் ஆரம்ப விடுதலையை வரவேற்பதாகவும், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு, சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை, மன்னிப்பு வழங்குவதற்கான சரியான நடைமுறையை ஜனாதிபதி பின்பற்றியுள்ளாரா என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக இலங்கை சட்டதரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அரசியல் பழிவாங்கலுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து நீதிமன்றம் வழங்கிய முடிவுகளை மாற்றியமைக்க சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவுடன் எந்த தொடர்பும் இல்லாத துமிந்த சில்வாவின் வழக்கை ஆணைக்குழுவின் இறுதி சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொண்டமையும், இதுபோன்ற தீவிரமான முடிவை அரசியல் பழிவாங்கலில் பதிவு செய்தமையும், நீதிதுறைக்கு ஏற்படுத்தப்பட்ட இழுக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமை குறித்து விளக்கமளிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியுள்ளவர்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் என்ன என்பது குறித்தும் ஐக்கிய தேசிய கட்சி .இதன்போது கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz