மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

- Advertisement -

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பான சுமையை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அரசாங்கத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டிய எரிவாயு நிறுவனம் தன்னிச்சையான முறையில் விலை அதிகரிப்பை மேற்கொள்வதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க குற்றஞ்சுமத்தினார்.

இந்த நிலையில் 12 தசம் 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரை பற்றாக்குறையின்றி உரிய விலைக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.


அமைச்சரவை என்பதும், நிறுவன நடவடிக்கைகள் என்பதும் வெவ்வேறானவை. அரசாங்க நிறுவனங்களாக இருந்தாலும், அவற்றின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் தீர்மானத்துக்கு அமையவே செயற்படுகின்றன. எல்லா விடயங்களையும் அமைச்சரவை அமைச்சருக்கு கூறும் நடைமுறை அரச நிறுவனங்களில் இல்லை. இதன் அடிப்படையிலேயே பற்றாக்குறையின்றி 12 தசம் 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொடுக்க அமைச்சரவையில் நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல தரப்பினருடன் கலந்துரையாடி உரிய விலைக்கு பற்றாக்குறையின்றி அதனை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, 18 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் ஊடாக மோசடியான முறையில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

Developed by: SEOGlitz