மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

- Advertisement -

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

- Advertisement -

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் சபையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடை சட்டமூலத்தை மீள் திருத்தத்துக்கு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளபட்டுவருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இதன்போது பதிலளித்தார்.

 

மேலும், நீண்ட காலம் சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இதன் போது மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஒரு வருடமாக பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைதுசெய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சபையில் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டவர்களாக பலரும் உள்ள நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி மாத்திரமே பேசப்படுவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதன் போது கேள்வியெழுப்பினார்.

.

இதேவேளை, எந்த குற்றமும் செய்யாத, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதினை தொடர்ந்து மாதக்கணக்கில் தடுப்புக்காவலில் வைத்திருப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாமல் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் சுட்டிக்காட்டினார்.

 

—-அரசாங்கம் தற்போழுது சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் கஷ்டப்படுவதாக தெரிவிக்கின்றது, அவர்களுக்கு வழக்குகள் தொடரப்படவில்லை என்றும் அவர்களுக்கு மிகப்பெரிய அசாதாரணம் இடம்பெற்றதாக கூறியது.
நீண்டகாலமாக எந்த குற்றமும் செய்யாத, ஷானி அபேசேகரவுக்கு என்ன நடந்தது?
எந்த குற்றமும் செய்யாத, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதினை தொடர்ந்து மாதக்கணக்கில் தடுப்புக்காவலில் வைத்திருப்பது தொடர்பில் ஏன் கவனம் செலுத்தாமல் இருக்கின்றார்கள்? அதனால் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய முன்னர், தங்களின் தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும்  —-

இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குற்றம் சாட்டப்பட்ட பலர் வெளியில் இருக்கும் பொழுது குற்றவாளிகள் வெளியில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிறியெல்ல சபையில் தெரிவித்தார்.


தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz