மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்தல் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்

- Advertisement -

நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்தல் தொடர்பில் இன்று  அமைச்சரவைப் பத்திரம்  தாக்கல் செய்யப்படவுள்ளது.

நீதியமைச்சர்  அலிசப்ரி மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் தினேஷ்குணவர்தன  ஆகியோரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்போது  பயங்கரவாத தடைச்சட்டதை மீளாய்வு செய்வதற்கான  குழுவொன்றை அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி கெப்பிட்டல் செய்திபிரிவுக்கு தெரிவித்தார்.

இந்த குழுவில் நீதித்துறை பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சுக்களை சேர்ந்த நிபுணர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

விசேட குழுவின் ஊடாக முன்வைக்கப்படும்  பரிந்துரைக்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் எனவும்  நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  இலங்கையில் அமுலில் காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் கடந்த 10 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் 613 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதோடுஇ 40 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இதற்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் இரத்துச்செய்ய வேண்டும் என்ற தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி தீவிரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துமாறு குறித்த தீர்மானத்தினூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  இலங்கையில் அமுலில் காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் அவர்களை தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவும் அதிகூடுதல் அதிகாரங்கள் காணப்படுவதாக   ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,.

மேலும்  இலங்கையில் மனித உரிமைகள் மீதான கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பேண்தகு தன்மை மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும்இ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே  பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு  இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz