மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணத்தடை இன்று  அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

- Advertisement -

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை இன்று  அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும்  23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4  மணிவரை மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் மாகாணங்களுக்கிடையிலான பயண நடவடிக்கைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விருந்துபசாரங்கள், பொதுநிகழ்வுகள், ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொது மற்றும் வாடகை வாகனங்களில் இருவருக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. .

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவையான உத்தியோகத்தர்களை மாத்திரம் கடமையில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி பட்டறை, கூட்டங்கள் ஆகியனவற்றிற்கு தேவையேற்படின் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன்,மணமக்கள் உட்பட பேருடன்  திருமண பதிவுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத வழிபாட்டு தலங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வங்கிகள் மற்றும் அடகு விற்பனை நிலையங்கள் இன்று திறக்கப்படும் என்பதுடன் 10 வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் சேவை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிகையலங்கார நிலையங்களில் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

சில்லறை விற்பனை நிலையங்களில்  3 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் ஒரே நேரத்தில் சேவை வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz