மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு மாதாந்த விசேட கொடுப்பனவு வேண்டும்

- Advertisement -

அத்தியாவசிய சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு மாதாந்த விசேட கொடுப்பனவொன்றைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச ஊழியர்கள் கொரோனா அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக அரச ஊழியர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவொன்று வழங்கப்பட வேண்டியது அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை ஊழியர்கள் இந்த விசேட கொடுப்பனவுக்கு உரித்துடையவர்கள் எனஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகள் கடுமையான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக, அகில இலங்கை முச்சக்கர வண்டி தொழில்முனைவோரின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஒருமாத காலமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் வருமானம் இன்றி கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் முச்சக்கர வண்டிகளுக்கான குத்தகை  கட்டணங்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சில வாகனங்களை பயணங்களில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz