மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயிற்சி புத்தகங்களை வழங்கி பாடதிட்டங்களை நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை

- Advertisement -

பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்களை வழங்கி பாடதிட்டங்களை நிறைவு செய்யும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செயதியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

- Advertisement -

தேசிய கல்வி நிறுவனம் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த வேலைதிட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய மாணவர்களுக்கு வீடுகளுக்கே பயிற்சி புத்தகங்கள் கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்திற்கு தேசிய கல்வி ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், கல்வியியலாளர்கள், அதிபர்கள், மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தரம் ஒன்று முதல் 13 ஆம் தரம் வரையான மாணவர்களை இலக்காகக் கொண்டு தேசிய தொலைக்காட்சியில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz